மார்கன் ஸ்டான்லி வெளியிட்ட புது அப்டேட்..

உலகளவில் பிரபல நிறுவனமாக இருக்கும் மார்கன் ஸ்டான்லி நிறுவனம், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வரும் டிசம்பரில் 82,000 புள்ளிகளை தொட வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. மொத்தத்தில் இது 12 விழுக்காடு குறைவாகும். தற்போதுள்ள நிலையை விட 7 விழுக்காடு அதிகம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்நாட்டு வளர்ச்சி, தனியார் முதலீடுகள், நிஜமான வளர்ச்சி மற்றும் நிஜமான வட்டி விகிதம், அமெரிக்காவின் வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த கணிப்பு செய்யப்பட்டுள்ளது. குறுகிய கால கடன்கள் மீதான வட்டி விகிதம் இன்னும் 0.50%வரை குறையும் என்று கணித்துள்ள மார்கன் ஸ்டான்லி நிறுவன ஆய்வாளர்கள், நிதித்துறை பங்குகள், கன்சியூமர் சைக்கிளிகள்ஸ், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டோருடன் கலந்து ஆலோசித்த பிறகே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மார்ச் மாதமே சென்செக்ஸ் 1லட்சத்து 5 ஆயிரம் புள்ளிகளை எட்டும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அது 91 ஆயிரமாக பின்னற் குறைக்கப்பட்டது. சில பொருட்கள் மீதான ஜிஎஸ்டி மற்றும் விவசாய சட்டங்கள் மீது மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. தற்போது வரை கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் கீழ் உள்ள நிலையில், இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி பணவீக்கம் ஓரளவு கட்டுக்குள் உள்ளது. உலகளாவிய வணிகப்போர் காரணமாக நிலை மாறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலர் விலையாக உயரும்பட்சத்தில் வரி விதிப்பு முறையை ரிசர்வ் வங்கி கடுமையாக்க வேண்டும் என்றும், சென்செக்ஸ் 63,000 புள்ளிகள் வரை கூட விழுக்கூடும் என்பது நிபுணர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அமெரிக்காவுடனான வணிக ஒப்பந்தத்துக்கு இன்னும் காலம் எடுக்கும் என்று கூறும் நிபுணர்கள், எளிதாக கணிக்கக் கூடிய வகையில் இந்தியாவின் வளர்ச்சி இருக்கும் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.