கண்காணிப்பை தீவிரப்படுத்தும் ரிசர்வ் வங்கி..
இந்தியாவில் வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் உள்ளன.இந்நிலையில் வழக்கத்துக்கு மாறான முறையில் வங்கி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பது தொடர்பாக நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. விதிகளை மீறியதற்காக கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி எச்டிஎப்சி நறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி ஏற்கனவே 1 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. குறிப்பிட்ட தொகைக்கு டெபாசிட் செய்தால் 250 ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
இதேபோல் ஆக்சிஸ் வங்கியில் பணியாளர்கள் யார் அதிகம் டெபாசிட் பெற வைக்கிறார்களோ அவர்களுக்கு பரிசுப் பொருட்களும் அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. அட்டகாசமான அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது.
ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை இந்தியாவில் பங்கிகளின் டெபாசிட் தொகை 10.2லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 14% உயர்வாகும். கடந்த 2016 ஆம் ஆண்டு வங்கிகள் தங்கள் ஊழியர்களுக்கு பரிசுகள் அளித்தால் அதில் இடம்பெற வேண்டிய அம்சங்களை அறிவித்துள்ளது. விதிகளை மீறி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு பணம் அளித்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கவும் ரிசர்வ் வங்கி தயாராக இருக்கிறது. விதிமீறில்கள் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதனால் வங்கி விற்பனை பிரிதிநிதிகள் சற்று கலக்கமடைந்திருக்கின்றனர்