ரோல்ஸ் ராய்ஸில் அறிமுகமாகியுள்ள பிரிசம் கார்..
உலகளவில் மிக மிக சொகுசு காராக கருதப்படும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது பிரிசம் ரக காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்நிறுவனம் தொடங்கி 120 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் விதமாக இந்த கார்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மொத்தமாகவே 120 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. 4 விதமாக இந்த காரை மாற்றி அமைக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கைகளாலேயே 16 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. 10 முறை பெயின்ட் செய்யப்படும் பிரசம் ரக கார் பர்ன் அவுட் எனப்படும் முறையில் தயாராகிறது. இந்த காருக்குள் இதுவரை கண்டிராத இண்டீரியர்கள் வைக்கப்பட்டுள்ளன. டிசைன் இயக்குநரான ஆன்டர்ஸ் வார்மிங் இது பற்றி தெரிவிக்கையில், இந்த நிறுவனம் மிக நேர்த்தியாக கார்களை உற்பத்தி செய்யும் என்று தெரிவித்துள்ளார். மிக மிக குறைவாக மட்டுமே தயாராவதால்தான் இந்த கார்களுக்கு இத்தனை மவுசு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இத்தனை மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் உள்ள இந்த காரின் விலை விவரத்தை அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை