22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

தீவிரமாகும் கட்டுப்பாடுகள்…

இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களை 2024ம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் கார் உற்பத்தியாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது அதன்படி, எம் மற்றும் என் வகையிலான வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

இந்தியாவில் உள்ள மோட்டார் வாகன சட்டத்தின்படி காரின் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவரும் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்பது விதி.ஆனால் அதனை பெரும்பாலானோர் மதிப்பதே இல்லை. அண்மையில் மெர்சிடீஸ் காரில் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் பாதுகாப்பு அம்சங்களை தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி பின் இருக்கையில் அமர்ந்திருக்கும் நபர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் அலாரம் அடிக்கும் முறையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

அண்மையில் நடந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனங்கள் அலாரம் ஒலிக்காத வகையில் கிளிப்களை விற்பனை செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் புதிதாக மூன்று வகை எச்சரிக்கை செய்யும் முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. முதலாவதாக இன்ஜின் ஆன் ஆகியுள்ளதா இல்லையா என்று விஷ்வல் வார்னிங் அளிக்க வேண்டும்

இரண்டாவதாக காரில் உள்ள அனைவரும் சீட் பெல்ட் அணிந்துள்ளார்களா அவ்வாறு அணியாவிட்டால் வீடியோ மற்றும் ஆடியோ எச்சரிக்கை விடுக்கப்படும்

மூன்றாவதாக சீட் பெல்ட் விரைவாக போடப்பட்டிருந்தால் எச்சரிக்கை செய்யும் முறை,

இந்த அம்சங்கள் குறித்து பொதுவான கருத்து தெரிவிக்க அக்டோபர் 5ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *