தலைவன் களம் இறங்கிட்டார்!!!!
ரிலையன்ஸ் ஸ்ட்ரேட்டஜிக் இன்வஸ்ட்மெண்ட் என்ற பெயரில் ரிலையன்ஸ் குழுமத்தில் ஒரு நிறுவனம் இயங்கி வந்தது
இந்த நிறுவனத்தை டீ மெர்ஜர் எனப்படும் பிரித்து ரிலயைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
ரிலையன்ஸின் மொத்த வியாபார வருவாயில் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலகட்டத்தில் இந்த நிதி
நிறுவனம் மட்டும் 1,387 கோடி ரூபாயை புழக்கத்தில் விட்டுள்ளது ரிலையன்ஸ் ஸ்ட்ரேட்டஜிக் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் தற்போது ஜியோ பினான்சியல் சர்வீஸ் என்ற பெயரில் இயங்கி வருகிறது. ஏற்கனவே இருந்த பங்குதாரர்கள் அப்படியே தொடர்வார்கள் என்றும் எந்த வித பணமும் கைமாறாமல் , நிறுவனத்தை மட்டும் பிரித்து தனியாக பங்குச்சந்தையில் ஜியோ நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனமும் இனி ஜியோவில் தனது சேவையை தொடர உள்ளது நிதிசார்ந்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு இன்சூரன்ஸ்,டிஜிட்டல் புரோக்கிங் ,சொத்து மேலாண்மை உள்ளிட்டவை புதிய நிறுவனத்திலேயே தொடர இருக்கிறது டிஜிட்டல் நிதி சார்ந்த சேவைகளை ஜியோ பைனான்சியல்ஸ் நிறுவனம் செய்ய இருக்கிறது.