6பில்லியன் பங்குகளை ஜெஃப் ஏன் விற்றார்??
அமேசான் நிறுவன உரிமையாளர் ஜெஃப் பெஸாஸ், கடந்த 14ஆம் தேதி 24மில்லியன் பகுகளை விற்றார். இதன் மதிப்பு 4பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதற்கு இணையத்தில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.2021க்கு பிறகு ஜெஃப் தனது பங்குகளை விட்டுள்ளார். இந்த சர்ச்சை ஓய்வதற்குள் 16ஆம் தேதி மீண்டும் 2பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை அவர் விற்றார். பங்குகளை விற்றது மூலம் ஜெஃப் உலக பணக்காரர் பட்டியலில் 199பில்லியன் அமெரிக்க டாலர்கள் பட்டியலில், முதலிடத்தில் உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் பெர்னார்ட் அர்னால்டு, மற்றும் எலான் மஸ்க் உள்ளனர். திடீரென பங்குகளை ஜெஃப் விற்றது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. பலர் தங்களுக்கு தோன்றிய காரணங்களை பதிவிட்டு ஃபன் செல்கின்றனர். சிலர் ஜெஃபின் தனிப்பட்ட வாழ்க்கையும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.