இந்திய பணக்காரர்கள் வெளிநாடுகளில் சொத்து சேர்ப்பது ஏன்?
இந்தியாவில் இருந்து சென்று வெளிநாடுகளில் சொத்து சேர்த்து வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கி தரவுகளின் படி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று அங்கு சொத்துகள் வாங்குவாரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது. 2015இல் வெளிநாடு சென்று அங்கு சொத்து வாங்கியோர் அளவு சராசரியாக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
இதே அளவு 2020-21 நிதியாண்டில் 12.7 பில்லியன் டாலர் ஆக உள்ளது. வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கி அதன் மூலம் குடியுரிமை பெற முடியும் என்பதாலும், கோடீஸ்வர குடும்பங்கள் இவ்வாறு செய்கின்றனர். பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதால் வெளிநாடுகளிலும் இந்தியர்களை வரவேற்கும் போக்கு உயர்ந்து வருகிறது. பணக்காரர்களின் குழ்ந்தைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியும் மேம்படுவதாக அவர்கள் வாதத்தை முன் வைக்கின்றனர்..