ஸ்மார்ட்டா வேல பாருங்க..
டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் மைக்கேல் டெல். இவர் தனது பணியாளர்கள் மட்டுமின்றி நவீன பணியாளர்களுக்கு ஒரு அட்வைஸ் அள்ளி வீசியுள்ளார். அதில் கடினமாக உழைக்கவேண்டாம் என்றும் அதே நேரம் ஸ்மார்ட்டாக உழைக்க வேண்டும் என்றார். வேலையும்-சொந்த வாழ்க்கையும் சமமாக நடத்துவது முக்கியம் என்று கூறியுள்ள டெல், அதிக நேரம் உழைப்பது குறைவான வேலையை மட்டுமே செய்ய முடிவதாக தெரிவித்தார். 59 வயதாகும் மைக்கேல் டெல், கடந்தாண்டு மட்டும் 88 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டியுள்ளார். இரவு 8.30 மணி அல்லது 9 மணிக்கு கட்டாயம் படுத்துவிட வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். அதிக நேரம் அரைகுறையாக வேலை செய்வதை விட சிறிது நேரம் வேலை செய்தாலும்அந்த பயணத்தை ரசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பணியிடத்தில் சிரிக்க முடியாத அளவுக்கு வேலை செய்தால் அது தவறு என்றும் கூறியுள்ளார். வெற்றி என்பது கடுமையாக உழைப்பது மட்டுமல்ல என்றும், வேலையையும் சொந்த வாழ்க்கையையும் நிர்வகிப்பது என்றும் அவர் கூறியுள்ளார். அண்மையில் எலான் மஸ்குக்கு தனது ஆதரவை மைக்கேல் தெரிவித்திருந்தார்.