ஐயோ!!! 75% ஆட்குறைப்பா?
உலகின் முன்னணி செயலிமற்றும் சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டரை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்வாங்கஉள்ளதாக நெடுநாட்களாக கூறப்படுகிறது. இருதரப்புக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் புதிய வடிவமாக44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கினாலும், அதன்பிறகு 75% பணியாளர்களைநீக்க மஸ்க் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் வெளியான தகவலை டிவிட்டர் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. வெறும் 2ஆயிரம் பேரை மட்டுமேபணியில் வைத்துக்கொள்ள மஸ்க் விரும்புவதாக கூறப்படும் நிலையில் இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஆட்குறைப்பு குறித்த தகவல் வதந்தி என்று டிவிட்டர் மறுத்தாலும் இந்தாண்டு இறுதியில் தற்போது பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளத்தில் 800 மில்லியன் அமெரிக்க டாலர்களை மிச்சம் பிடிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.இதனால் கிட்டத்தட்ட 75% டிவிட்டர் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க பத்திரிகைகள்தெரிவிக்கின்றன.டிவிட்டரை வாங்கலாமா வேண்டாமா என்ற குளறுபடியில் இறுதி முடிவு வரும் 28ம் தேதிக்குள் தெரிந்துவிடும் என்பதால்கடைசி நேர பரபரப்பு உச்சபட்சமாக தொடர்கிறது.