கிரிப்டோ – தொடரும் சோதனை..
கிரிப்டோ கரண்சி தொடர்பான சர்ச்சைகள் மற்றும் பரிவர்த்தனை நிறுவனங்கள் தொடர்பான சோதனைகள் தொடந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை நிறுவனமான, வால்டுக்கு சொந்தமான 370 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
உலகம் முழுவதும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை வேகமாக அதிகரித்து வந்தது. இருப்பினும், அண்மையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக, கிரிப்டோ கரண்சி குறித்த நம்பிக்கை தொடந்து சரிந்து வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறையும், கிரிப்டோ பரிவத்தனை நிறுவனங்களில் தங்களது சோதனையை அதிகரிக்க தொடங்கி உள்ளது. தொடர்ந்து புகார்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கிரிப்டோ கரண்சி பரிவர்த்தனை நிறுவனங்கள், எந்தவொரு அமைப்பின் கண்காணிப்பிலும் இல்லாததால், பல்வேறு முறைகேடுகளும், வருமான வரி ஏய்ப்பும் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றது. இந்நிலையில் வசீர்எக்ஸ் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை மையங்களில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி அவற்றின் 56 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மத்திய அமலாக்கத்துறை அண்மையில், முடக்கியது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து 2 ஆயிரத்து 790 கோடி ரூபாய் மதிப்பிலான கிரிப்டோ சொத்துக்களை வேறு நாட்டில் உள்ள கிரிப்டோ வாலட்களுக்கு மாற்றியது தொடர்பாக வால்டு கிரிப்டோ பரிவரத்தனை மையத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அதற்குச் சொந்தமான 370 கோடி ரூபாய் சொத்துக்களை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.