கோதுமை பற்றாக்குறை.. சப்பாத்தி விலை உயரலாம்
இந்தியா ‘உலகிற்கு உணவளிக்க’ தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நான்கு மாதங்களுக்குள், அரசாங்கம் தானிய இறக்குமதியை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
இந்திய உணவுக் கழகத்தின் கூற்றுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் கையிருப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில் கோதுமை பணவீக்கம் கிட்டத்தட்ட 12% மாக உள்ளது.
தற்போது நிலவும் சூழ்நிலையில், தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்ற காரணங்களால், வெளிநாட்டில் இருந்து கோதுமையை வாங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் தானியங்களை இறக்குமதி செய்ய உதவும் வகையில், கோதுமையின் மீதான 40% இறக்குமதி வரியை குறைக்கலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக Bloomberg தெரிவித்துள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, 2021-22 கோதுமை அறுவடை பிப்ரவரி மதிப்பீட்டில் 111 மில்லியனில் இருந்து சுமார் 107 மில்லியன் டன்களாக இருக்கும். இருப்பினும், வர்த்தகர்கள் மற்றும் மாவு ஆலைகள் 98 மில்லியன் முதல் 102 மில்லியன் டன் வரை கணித்துள்ளனர்.