தனியார் வங்கியுடன் இணைகிறதா பெடரல் வங்கி??
வாரத்தில் வர்த்தகத்தின் முதல் நாளில் பெடரல் வங்கியின் பங்குகள் அதிக விலைக்கு ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தையில் 52 வாரங்களில் இல்லாத வகையில் ஒரு பெடரல் வங்கி பங்கின் விலை. 129 ரூபாயாக இருந்தது. தனியார் வங்கியுடன் பெடரல் வங்கி இணைய உள்ளதாக வெளியான தகவல் காரணமாகவே இந்த விலையேற்றம் காணப்பட்டது. ஆனால், இது குறித்து பெடரல் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதன்படி, பெடரல் வங்கி எந்த தனியார் வங்கியுடன் இணையவில்லை என்றும், வெளியான தகவல் ஊகமானது என்றும் கூறியுள்ளது. செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பின் விதிகளை பின்பற்றியே அடுத்த கட்ட அறிவிப்பு வெளியிடுவோம் என்றும் கூறியுள்ளது. அந்த வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் மட்டும் 600 கோடி ரூபாயை கடந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் இருந்ததை விட 63.5% அதிகமாகும்..அந்த வங்கியின் வாராக்கடன் விகிதம் வெறும் 2.6% ஆக உள்ளது. இது போன்ற வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் முன்னர், பங்குச்சந்தையில் தான் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில், இந்த செய்தியை பெடரல் வங்கி மறுத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.