நம்மிடம் இல்லை… வெளியானது உண்மை…
அரிசிக்கு பற்றாகுறை இல்லை.. கோதுமைக்கு பற்றாக்குறை இல்லை என்று தொடர்ந்து மத்திய அரசு தெரிவித்து வந்த நிலையில், அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்த, ஏற்றுமதி வரியை விதித்துள்ளது மத்திய அரசு. இதன்படி,
பாசுமதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய 20 சதவிதம் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி விதிப்பு, உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் அரிசி பற்றாக்குறை ஏற்படாமல் சமாளிக்கும் வகையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. காரிப் பருவ நெல் சாகுபடி பீகார், மேற்கு வங்கம், உத்தரபிரதேசத்தில் போதிய மழை இன்றி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரிசி ஏற்றுமதியை குறைத்தால், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய முடியும் என அரசு நம்புகிறது. கூடவே, விலை அதிகரிக்காமலும் பார்த்து கொள்ள முடியும் என நம்புகிறது. இதன்படி, ஏற்றுமதி வரி விதிப்பால், ஏற்றுமதி குறைந்து உள்நாட்டில் போதிய அரிசி கிடைக்கும் என்று மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. கடந்த 2021 – 22ம் ஆண்டில் 21 புள்ளி 2 மில்லியன் டன் அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. அரிசி போதுமான அளவு இருக்கிறது, கோதுமை போதுமான அளவு இருக்கிறது.. எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிவந்த அரசு, தற்போது அதன் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்தி இருப்பது, பற்றாக்குறையை காட்டுவதாக உள்ளது.