வெளிநாடு செல்லும் EPFO…
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் எனப்படும் EPFO நிறுவனம் இந்தியாவுக்கு வெளியிலும் இயங்க பூர்வாங்க பணிகளை தொடங்கியுள்ளது. அடுத்த கால் நூற்றாண்டில், சமூக பாதுகாப்புக்காக 2037ம் ஆண்டுக்குள் உலகின் பலநாடுகளிலும், குறிப்பாக ஆசியா முழுவதும் இயங்கும் வகையில் இந்த அமைப்பு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான், பகுதியாக லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவில் கிளை தொடங்கும் பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.சிறு சிறு நாடுகளுக்கு உதவும் வகையில் இந்த அமைப்பு கிளைகளை தொடங்க உள்ளது. 70 ஆண்டுகளாக இந்த நிறுவனம் இந்தியாவில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.வெளிநாடுகளில் களமிறங்கும் பி.எப்.நிறுவனம் உலகளாவிய நிபுணர்களை கொண்டு, தனித்து இயங்கும் வகையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வகை அமைப்புகள் செயல்பாட்டுக்கு வந்தால் அந்தந்த நாடுகளிலும் சட்ட திட்டத்துக்கு உட்பட்டு வருங்கால வைப்பு நிதியை ஊழியர்களுக்கு அளிக்க முடியும். விரைவில் இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற உள்ளதாக மத்திய அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன