விலையை குறைப்பீங்களா? மாட்டீங்களா?
உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த பெட்ரோல்,டீசல் தேவை 85 விழுக்காடு இறக்குமதி மூலமே ஈடு செய்யப்படுகிறது.சர்வதேச சந்தையில் ஒரு பேரல் பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு முதன் முறையாக கடந்த வாரம் 90 டாலருக்கும் கீழ் குறைந்தது. எனினும் உயர்த்தப்பட்ட பெட்ரோல்,டீசல் விலை இன்று வரை இந்தியாவில் குறைக்கப்படவே இல்லை. இது குறித்து பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ரஷ்யா போர் தொடங்கிய நேரத்தில் ஏற்பட்ட இழப்பை தற்போது இந்திய அரசுத்துறை நிறுவனங்கள் சரிசெய்து வருவதாக கூறியுள்ளார். கடந்த ஏப்ரலில் 102 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய், மே மாதம் 109 புள்ளி 51 டாலராகவும், ஜூன் மாதத்தில் 116 டாலர் என்ற இமாலய உச்சத்தையும் தொட்டது. இந்த சூழலில் ஜூலை முதல் கச்சா எண்ணெய் விலை படிப்படியாக குறைந்து தற்போது 92 டாலர்களாக உள்ளது.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல்,டீசலில் அதிக இழப்பை சந்தித்து வந்த நிலை தற்போது மாறத்தொடங்கியுள்ளது. சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளால் எண்ணெய் விற்பனை மற்றும் இறக்குமதி சரிந்தே கிடக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி இந்திய பெட்ரோலிய நிறுவனஙக்கள் குறைந்த விலைக்கு பெட்ரோல், டீசலை வாங்கியுள்ளன…