யாராவது நிர்பந்தித்தால் என்னிடம் சொல்லுங்கள்”
ஆட்டோமொபைல் பாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று பேசினார்.
கடந்த 5 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து வாகன உதிரி பாக இறக்குமதி கடந்தாண்டு மட்டும் 33 விழுக்காடு உயர்ந்துள்ளது.
இதன் மொத்த மதிப்பு 18 புள்ளி 3 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்த அளவு கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவாகும்.
இதனை சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் பேசினார். அதில் உள்ளூரிலேயே கிடைக்கும் பொருட்களை தவிர்த்துவிட்டு வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்ய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிர்பந்தித்தால் தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
சில கூட்டு நிறுவனங்கள் தங்கள் பங்குதாரர் நிறுவன பொருட்கள் எடுத்துக்கொள்ள நிர்பந்திப்பதை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர், இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து வணிகம் நடத்தும் நிறுவனங்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டால் தாராளமாக அவர்கள் வெளியேறலாம் என்றும், இந்தியாவில் அவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லாமல் வெளியேற்ற அரசு உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் மத்திய அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளது வாகன உதிரி பாக உற்பத்தியாளர்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.