22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

தங்கம் வாங்க சிறந்த நேரமா?

தங்கத்தில் முதலீடு செய்தால் பெரிய லாபம் ஈட்டலாம் என முதலீட்டாளர்கள் இந்தாண்டு எடுத்த முடிவு தலைகீழாக மாறிப்போய் உள்ளது. அமெரிக்காவில் கடந்த 6 மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. 14 விழுக்காடு இந்த காலகட்டத்தில் தங்கத்தின் விலை வீழ்ந்துள்ளது.

போர் மற்றும் கொரோனா உள்ளிட்ட பேரழிவான காலகட்டத்தில் தங்கம் புதிய உச்ச விலையை எட்டியது. அதாவது, கடந்த மார்ச் 2022-ல் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் 2 ஆயிரத்து 69 டாலர்களாக இருந்தது. இந்தாண்டு மட்டும் 7.9 விழுக்காடு தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு மிகமோசமான வீழ்ச்சியாக இதை காணமுடிகிறது.

 2 ஆயிரம் டாலர்களில் விற்று வந்த தங்கம் திடீரென சரிந்து.1,650முதல் 1,800 டாலர்களாக உள்ளது. இந்த விலை ஏற்ற இறக்கத்துக்கு அமெரிக்க பெடரல் ரிசர்வின் முடிவுகளே காரணமாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் அமைப்பு வட்டி விகிதங்களை ஏற்றுவதாக இருந்தது. ஆனால் திடீரென அந்த அமைப்பு பின்வாங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளில் அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர். தங்கத்தில் பணத்தை கொட்டிய முதலீட்டாளர்கள் தற்போது மெல்ல மெல்ல பங்குச்சந்தை பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். நடப்பாண்டின் கடைசி காலாண்டில் தங்கத்தின் விலை இன்னும் கூட சரியும் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். அடுத்தாண்டு ஒரு அவுன்ஸ் தங்கம் ஆயிரத்து 820 டாலர்கள் என்ற அளவில் உயரும் என்றும் கணித்துள்ளனர். தற்போது அமெரிக்காவில் தங்கம் ஆயிரத்து 650 டாலர்கள் என்ற அளவில் விற்கப்படுகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *