என்ன பண்ணலாம்? விவாதிக்கும் பெட்ரோலிய அமைச்சகம்
இந்தியாவில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் விண்ட் ஃபால் டாக்ஸ் என்ற வரி எண்ணெய் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதுகுறித்து ஆலோசிக்க வரும்படி பெட்ரோலிய அமைச்சகம் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சில பிளாக்குகளை இந்த வரி விதிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசு விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. 1990களில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் எண்ணெய் உற்பத்திக்காக ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள், அரசாங்கத்துக்கு அளித்து வரும் ராயல்டி உள்ளிட்ட வரிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளன. உள்நாட்டிலேயே தயாராகும் பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு சிறப்பு சலுகைகள் அளித்து வருகிறது. மேலும் உள்நாட்டிலேயே உற்பத்தியாகும் பெட்ரோலிய பொருட்களுக்கு சிறப்பு கலால் வரியாக ஒரு டன்னுக்கு 23 ஆயிரத்து 250 ரூபாய் விதிக்கப்பட்டது. பின்னர் அடுத்த சிலநாட்களில் 10 ஆயிரத்து 500 ரூபாயாக குறைக்கப்பட்டது. உள்நாட்டிலேயே எண்ணெய் வளங்களை கண்டுபிடிக்க வேண்டிய அவசர அவசிய தேவை உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது