இனி எல்லாம் 1 மணி நேரத்தில் ….
வரும் 2047ம் ஆண்டு உலகளவில் சரக்கு கையாள்வதில் இந்தியா 10% என்ற அளவை எட்ட இலக்கை நிர்ணயித்துள்ளது. இதையொட்டி துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு வரும் சரக்குகளை , வந்த ஒரு மணி நேரத்துக்குள் வெளியேற்றும் முறைக்கான பணிகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.இந்த திட்டத்துக்கு கஸ்டம்ஸ் ஒன் என்று பெயரிடப்பட்டுள்ளது
2047ம் ஆண்டு இந்தியா நூறாம் ஆண்டு சுதந்திரதினத்தை கொண்டாட உள்ள நேரத்தில் இந்தியா வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை எட்ட வேண்டும் என்ற நோக்குடன் இந்த திட்டத்தை மத்திய அரசின் வணிகத்துறை செய்து வருகிறது. தற்போது இந்தியாவில் விமானத்தில் வரும் சரக்குகள் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்ற சராசரியாக 24 முதல் 48 மணி நேரம் ஆகிறது. கடல்சார்ந்த சரக்குகள் இந்திய துறைமுகங்களில் இருந்து வெளியேற சராசரியாக 3 நாட்கள் அதாவது 72 மணி நேரம் ஆகிறது. உலக பொருளாதாரத்தில் 3-ம் இடம் பிடிக்க அரசு பணிகளை செய்து வரும் நிலையில் சரக்கு கையாள்வதில் தாமதம் ஏற்படுவதை தடுக்க இந்த முறையை அரசு விரைவில் கொண்டுவர உள்ளது