டிசிஎஸ் ஊழியர்களுக்கு எச்சரிக்கை …
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் எல்லா பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்தனர். இதன் ஒரு பகுதியாக டாடா கன்சல்டன்சி நிறுவனமும் இதனை வலியுறுத்தினர். இந்த நிலையில் அண்மையில் டிசிஎஸ் நிறுவனம் தனது பணியாளர்களை மீண்டும் அலுவலகம் வர அழைத்துள்ளனர். பல முறை வலியுறுத்தியும் டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் அலுவலகம் வர மறுத்து அடம்பிடித்துள்ளனர். இந்த சூழலில் அண்மையில் டிசிஎஸ் தனது பணியாளர்களுக்கு கடினமான மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், வாரத்தில் குறைந்தபட்சம் 3 நாட்களாவது அலுவலகம் வர வேண்டும் என்றும் இல்லையெனில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
வரும் 2025-ம் ஆண்டுக்குள் 25/25 என்கிற திட்டத்தை டிசிஎஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. அதாவது 4-ல் ஒரு பங்கு அளவாவது அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அலுவலகத்துக்கே வராமல் டிசிஎஸ் நிறுவன பணியாளர்கள் தற்போது அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் வீடுகளில் இஷ்டத்துக்கு அமர்ந்து பணியாற்றி வந்த பணியாளர்கள் மீண்டும் கொரோனாவுக்கு முன்பு இருந்தததை போல ஸ்டைலாக வலம் வர ஆயத்தமாகியுள்ளனர்.