என்ன!!! 7லட்சம் கோடியா ?
உலகளாவிய பங்குச்சந்தையில் நிலையற்ற சூழல் உள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 4வது நாளாக சரிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், நிஃப்டி 17 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சென்றுள்ளன
பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக 7 லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தையில் இந்திய பங்குகளின் மதிப்பு 269.86லட்சம் கோடியாக சரிந்துள்ளது
அமெரிக்க பெடரல் ரிசர்வ், கடன்களுக்கான வட்டியை மேலும் ஒரு முறை விலையேற்றம் செய்து அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும்,அமெரிக்க பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி இருக்கும் என்பதாலும் முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர்
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, பாண்ட்களில் முதலீடு குறைவு,சர்வதேச பங்குச்சந்தைகளின் சூழல்கள் நிலைமையை இன்னும் சிக்கலாக்கியுள்ளது
உலகளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடுகள் குறைந்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். உலகளவில் நிலவும் மந்த நிலையை சமாளிக்கும் வகையில் இந்திய பங்குச்சந்தைகள் இல்லாததால் வரும் நாட்களில் இந்திய பங்குச்சந்தையின் சூழல் முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது