உலக நாடுகளுக்கு சவால் விடும் இந்தியா:
உலகளவில் அமெரிக்கா,சீனாவுக்கு அடுத்தபடியாக தைவானில்தான் அதிக சிப்கள் தயாரிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் சீனாவுக்கு போட்டியாக இந்தியா சிப் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் படையெடுப்பு காரணமாக தைவானில் உள்ள தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் தற்போது நிலவி வருகிறது. இந்த சூழலில் தைவானில் இருந்து சில ஆலைகள் குஜராத் மாநிலத்துக்கு வருவது இந்தியாவில் சிப் உற்பத்தியை அதிகப்படுத்த உள்ளது.
உலகளவில் அதிக செமிகண்டக்டர்களை ஏற்றுமதி செய்யும் டிஎஸ்எம்சி நிறுவனம் மட்டும் 50 விழுக்காடு சிப்களை உற்பத்தி செய்கிறது.
ஆனால் அமெரிக்காவின் புதிய சிப் தயாரிப்பு விதி தைவானுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தற்போது 75 பில்லியன் டாலர் அளவுக்கு மின்சாதன பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியாவில் செமிகண்டக்டர்கள் உற்பத்தி அதிகமாகும்பட்சத்தில் 2025-26ம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலர் அளவுக்கு மின்சாதன பொருட்கள் உற்பத்தி செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போர் காரணமாக சீன நிறுவனங்களுக்கு மாற்றாக பிற நாட்டு சிப்களை பிற நாடுகள் விரும்பத் தொடங்கியுள்ளன. எனவே தைவானுக்கு அடுத்தபடியாக அனைத்து நாடுகளின் பிரதான தேர்வாகவும் இந்தியா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய், அணு உலைகளைப்போல டிஜிட்டல்பொருளாதாரத்துக்கு எரிபொருளாக இருக்கும் செமிகண்டெக்டர் உற்பத்தியில் பெரிய நாடுகள் ஆர்வம் காட்டாத நிலையில், இந்தியா தனித்துவமாக முன்னேறி வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.