2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்த வெளிநாட்டு பண கையிருப்பு
ஒரு நாட்டில் பிற நாடுகளின் கரன்சிகள் வைத்திருக்கும் அளவுக்கு ஃபாரக்ஸ் ரிசர்வ் என்று பெயர். இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில் வெளிநாட்டு பண கையிருப்பு தொடர்ந்து கரைந்து வருகிறது
ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின்படி செப்டம்பர் 30ம் தேதி வரை முடிந்த வாரத்தில் இந்தியாவின் வெளிநாட்டு கரன்சி கையிருப்பு மேலும் 4.85பில்லியன் அமெரிக்க டாலர் சரிந்துள்ளது. இதனால் இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு பணத்தின் அளவு 532.66பில்லியன் அமெரிக்க டாலராக தொடர்கிறது. இந்த அளவு இரண்டு ஆண்டுகளில் இல்லாத மிக்க்குறைந்த அளவாகும்.
வாராந்திர தரவுகளை வைத்து பார்த்தால் வெளிநாட்டு பண சொத்துமதிப்பும் தொடர்ந்து வீழ்ந்து 472.81 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதேபோல் இந்தியா வசம் இருக்கும் தங்க கையிருப்பும் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்திய அரசு வசம் தற்போது உள்ள தங்கத்தின் மதிப்பு 37.61 பில்லியன் டாலராக சரிந்துள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82 ரூபாயாக உள்ள நிலையில் கடந்தாண்டை ஒப்பிடுகையில் இந்தியாவில் வெளிநாட்டு பணத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 110 பில்லியன் டாலர் கரைந்துள்ளது
இந்தியாவில் நடப்பு கணக்கு பற்றாக்குறை இருக்கும் என்பதால் வெளிநாட்டு கையிருப்பு மேலும் கூட சரிய வாய்ப்புள்ளதாக ஐடிஎப்சி நிறுவன அதிகாரிகள் கணித்துள்ளனர்