அதானி குழுமத்திடம் இருந்து 20,000 கோடி ரூபாய் பெற ஒப்புதல்…
அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி அண்மையில் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவன பங்கை வாங்கினார். இந்த நிறுவனத்தில் 91.37% பங்கு தற்போது அதானி வசம் உள்ளது. இந்த நிலையில் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு அம்புஜா நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதல் சனிக்கிழமை கிடைத்துள்ளது.
கவுதம் அதானியின் மகன் கரண் அதானியை அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவன இயக்குநர்கள் பட்டியலில் சேர்க்க கவுதம் அதானி முடிவெடுத்துள்ளார்.
இதற்கான சிறப்பு தீர்மானத்துக்கும் அம்புஜா நிறுவன சிறப்பு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட்ஸ் நிறுவனத்தை 1லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதானி குழுமம் வாங்கியிருந்தது.
இந்த நிலையில் நடந்த சிறப்புக்கூட்டத்தில் அதானி குழும அதிகாரிகள் ஆதிக்கம் செலுத்தினர். கடந்த வாரம் IIAS அமைப்பினர், அதானி குழுமத்துக்கு எதிராக அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவன இயக்குநர்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. ஆனால் தற்போது அதானி குழுமத்திற்கு ஆதரவாக தற்போது வாக்களிக்கப்பட்டுள்ளது.
20 ஆயிரம் கோடி ரூபாயை அம்புஜா நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணிகளை ஹார்மோனியா நிறுவனம் முன்னெடுத்துள்ளது.