ஆட்டம் காணும் சிப் சந்தை…
அமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீனா சிப் தயாரிக்க அமெரிக்கா கட்டுப்பாடுகளை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதன் காரணமாக உலகளவில் சிப் சந்தை பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக தென்கொரியா மற்றும் தைவானைச் சேர்ந்த நிறுவனங்களும் உற்பத்தி இழப்பை சந்தித்து வருகின்றன.
சீனாவை பழிவாங்க நினைத்த அமெரிக்காவின் முயற்சி தைவான் மற்றும் தென்கொரியாவையும் உலுக்கியுள்ளது.
தைவானின் மிகப்பெரிய செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனமான டிஎஸ்எம்சி மற்றும் சாம்சங்க் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 9% சரிவை சந்தித்து உள்ளன.
ஜப்பான்,சீனா மற்றும் தைவான் நிறுவனங்களில் மட்டும் கிட்டத்தட்ட 240 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சீனாவை மட்டும் நம்பாமல் பிற நாடுகளிலும் சிப் ஏற்றுமதியை செய்ய அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜப்பானில் அதிக தொகைக்கு ஆலைகளை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. பணிகள் முடிந்து ஜப்பானில் சிப் தயாரிப்பு உருவாவதற்குள் சந்தை பெரிய அளவில் அடிவாங்கும் என்பதால் தற்போதைய உளகளாவிய சரிவை ஏற்கத்தான் வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
சிப் உற்பத்தியில் சீனா கொடிகட்டி பறந்தாலும் சீனாவுக்கு சிப் தயாரிக்கும் தொழில்நுட்ப உபகரணங்கள் அமெரிக்காவில் இருந்தே வருவதால் அமெரிக்கா வைத்த சோதனையில் சீனா வசமாக சிக்கியுள்ளது என்றே விமர்சிக்கலாம்…