போதைபொருள் விற்றதாக அமேசானுக்கு அபராதம்….
அமெரிக்காவின் முன்னணி மின்வணிக நிறுவனமான அமேசான் உலகம் முழுவதும் பிரபலமானதாகும்.
இந்த நிறுவனத்தில் பல லட்சக்கணக்கான பொருட்கள் , அந்தந்த நாடுகளுக்கு உகந்த உள்ளூர் பொருட்கள்
விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் தலைநகர் மாஸ்கோவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதில்
அமேசான் நிறுவனத்தில் ரஷ்ய விதிகளை மீறி, போதைப்பொருட்கள் விற்பதாகவும், தற்கொலையை தூண்டுவதாகவும்
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விதிகளை மீறியதற்காக அமேசான் நிறுவனத்துக்கு 4மில்லியன் ரூபெல்ஸ்
அதாவது 65 ஆயிரம் டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுக்கத் தொடங்கியது முதல் ரஷ்யாவில் இயங்கும் அமெரிக்க நிறுவனங்கள்
வணிக ரீதியிலான தாக்குதல்களை எதிர்கொள்கின்றன. இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவில் இருந்து
பல வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறவும் செய்துள்ளன.
அண்மையில், மெட்டா நிறுவனத்தை பயங்கரவாதிகளை போல ரஷ்ய அரசு புறக்கணித்துள்ளது. கூகுள்,ஆப்பிள் நிறுவன
செயல்பாடுகளையும் ரஷ்யா ஏதோ ஒருவகையில் முடக்க நினைக்கிறது.
இதன் , வெளிப்பாடாக அண்மையில் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு ரஷ்யா அபராதம் விதித்து உள்ளது.
இதேபோல தற்போது அமேசானுக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.