சூப்பர் ப்பா!!!! 25% இன்கிரிமென்ட்!!!
இன்போசிஸ் நிறுவனம் இந்தியாவில் பிரபலமான தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகும். அண்மையில் இந்த நிறுவன பணியாளர்களுக்கு 10 முதல் 13 % சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.அதில் குறிப்பிட்ட ஒரு சில பணியாளர்களுக்கு மட்டும் 25% சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. திறமையான பணியாளர்களை புதிதாக எடுப்பதற்கு ஆகும் செலவாகும் என்ற நிலையில்,ஏற்கனவே பணியில் உள்ள ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அதிகம் அளிக்கப்பட்டது.
2023 நிதியாண்டின் ஜூனுடன் முடியும் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தில் அட்ரிஷன் எனப்படும் பணியில் இருந்து வெளியேறுவோரின் அளவு 28.4 விழுக்காடாக இருந்தது. இரண்டாவது காலாண்டில் இந்த அளவு 27.1%ஆக குறைந்துள்ளது.
2021-2022நிதியாண்டில் இருந்ததை விட தற்போது 40 ஆயிரம் பேருக்கு அந்த நிறுவனத்தில் பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. பிளாட்டினம் கிளப் என்ற திட்டத்தின் மூலம் புதிதாக பணியில் சேர்வோர் சிறப்பாக பணியாற்றினால் 7 ஆண்டுகளில் மேலாளராக பதவி உயர்வு பெற முடியும் இந்தியாவில் 2% பணியாளர்கள் மட்டுமே இந்த கிளப்பில் உள்ளனர் என்கிறது இன்போசிஸ் நிறுவன புள்ளிவிவரம்.