இது எங்களின் சாதனை என்று சொல்லிக்குவாங்களோ!!!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இந்திய ரூபாயின் மதிப்பு 82 ரூபாய் 70 காசுகளாக இருந்தது. இந்திய ரூபாயின்
மதிப்பு மேலும் 50 காசுகள் வலுப்பெற்று 82 ரூபாய் 20 காசுகளாக உள்ளது,அமெரிக்காவில் பொருளாதாரத்தை சரிசெய்யும் வகையில் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
கடந்த சில மாதங்களாக பெடரல் ரிசர்வ் தொடர்ந்து அனைத்து வகையான கடன்களின் விகிதங்களும் உயர்த்தப்பட்டு
வந்த நிலையில் தற்போது மேலும் வட்டி உயர்வு அமல்படுத்தும் திட்டத்தை நிறுத்தி வைக்க பெடரல் ரிசர்வ் திட்டமிட்டுள்ளதாக
தகவல் பரவியுள்ளது.
இந்த காரணிகளால் இந்தியாவில் சாவரின் பாண்ட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரத் தொடங்கியுள்ளது அமெரிக்க கரூவூல பத்திரம் விற்பனை 30 அடிப்படை புள்ளிகள் சரிந்துள்ளது. அமெரிக்க டாலர் சற்று வலுவிழந்தாலும் கச்சா எண்ணெய் விலையேற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது பிரண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 95 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாலும் இந்திய ரூபாய் மதிப்பு சரிய முக்கிய காரணமாக உள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பில் லேசான சரிவு இந்திய சந்தைகளை சற்றே லாபகரத்தை நோக்கி இழுத்துச்சென்று வருகிறது.