எலான் மஸ்க்குக்கு பணம் கொடுத்து உதவியது யார்….
பிரபல சமூக வலைதள நிறுவனமான டிவிட்டரை எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்கி உலகையே திரும்பி
பார்க்க வைத்துள்ளார். டிவிட்டர் நிறுவனத்துக்கு 44 பில்லியன் டாலர் அளிக்க வேண்டும் என்றாலும் மொத்தமாக 46.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகையே உற்று நோக்க வைத்த இந்த இமாலய கைமாற்றத்துக்கு யார் பணம் கொடுத்து உதவியது என்ற கேள்வி வணிக வட்டாரத்தில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரித்து பார்க்கையில் மஸ்க் குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்தையோ, வங்கியையோ மட்டும் நாடாமல் பல வங்கிகளிடம் முயற்சி செய்து பார்த்துள்ளார். அமெரிக்க வங்கி, பார்க்கிளேய்ஸ் வங்கி, மார்கன் ஸ்டான்லி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களால் இயன்ற அளவுக்கு பணத்தை கடனாக மஸ்க்குக்கு அளித்துள்ளனர். அதாவது மொத்தம் 13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் இந்த நிறுவனங்கள் கூட்டாக அளித்துள்ளனர்.இதில் ஸ்டான்லி மார்கன் மட்டும் அதிகபட்சமாக 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை அளித்து மஸ்குக்கு உதவியுள்ளது வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு 1 பில்லியன் டாலரை மஸ்க் செலுத்தவேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் மொத்த தொகையில் ஈக்விட்டியாக மட்டும் 33 பில்லியன் டாலரை மஸ்க் டிவிட்டருக்கு செலுத்தியுள்ளார் இதில் 27 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ரொக்க பணமாக கைமாறுகிறது. டிவிட்டரில் தனக்கு ஏற்கனவே இருந்த 9 விழுக்காடு பங்குகளை மஸ்க் பங்குச்சந்தையில் நிதி திரட்டும் முயற்சி மூலம் 4 பில்லியன் டாலர்களை சேர்த்து வைத்துள்ளார். கிடைத்த அனைத்து பணத்தையும் கொண்டு சென்று டிவிட்டரில் கொட்டியுள்ள எலான் மஸ்க்,பணம் போதவில்லை என்பதால் ஆரக்கிள் நிறுவன இணை நிறுவனர் லாரி எல்லிசன் மற்றும் கிரிப்டோ கரன்சி நிறுவனமான பினான்ஸ் ஆகியோரிடம் கடனாக பெற்றுள்ளார். சவுதி அரேபியாவில் உள்ள மன்னர் அல்வாலீத் பின் தலாலும் தனது நண்பர் மஸ்குக்கு ஆதரவாக 35 மில்லியன் பங்குகளை வாங்கியுள்ளார்.