லாட்டரியில் அடித்த ஜாக்பாட் – பணத்தை என்ன செய்தார் தெரியுமா?
சீனாவின் தெற்கு பகுதியில் லி என்பவர் வசித்து வருகிறார்.அவர் அண்மையில் நானிங் பகுதியில் ஒரு லாட்டரி
டிக்கெட் வாங்கினார். அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு அமெரிக்க மதிப்பில் 30 மில்லியன் டாலர் பரிசும் விழுந்தது
ஆனால் அந்த பணத்தை அவர் தனி ஆளாக சென்று பெற்றுக்கொண்டார்.மனைவி,குழுந்தைகளிடம் கூட சொல்லவில்லை
இத்தனை பெரிய தொகையை திடீரென கிடைத்தால் தனது குடும்பத்தினர் சோம்பேறியாகிவிடுவார்கள் என்று கூறியுள்ள லீ
கிடைத்த பணத்தில் உள்ளூர் மக்களின் நலனுக்காகவும், நல்ல காரியங்களை செய்வதற்கும் 5 மில்லியன் யுவான் பணத்தை நன்கொடையாக அளித்துவிட்டார். அதிக பணம் குடும்பத்தினருக்கு கிடைத்தால் அவர்கள் வருங்காலத்துக்காக உழைக்க மாட்டார்கள் என்றும் அவர்களிடம் தெரிவித்தால் பணத்தை செலவழித்துவிடுவார்கள் என்பதற்காகவே இப்படி செய்துள்ளதாக லீ
தெரிவித்துள்ளார். 30 மில்லியன் டாலர்கள் கிடைத்தும் அதில் 5 மில்லியன் யுவான் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ள நிலையில்
மீத தொகையை என்ன செய்வது என்று தெரியாமல் லீ தவித்து வருகிறார்.. மனைவி,குழந்தைகளிடம் கூட சொல்லாமல் ரகசியமாக சென்று லாட்டரி வாங்கி அதில் கிடைத்த பணத்தை குடும்பத்தினரிடம் இருந்து மறைத்துள்ள சீன நபர் உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளார்.