இது புதுசா இருக்கே!!!
ஒருவர் வீட்டில் ஏதேனும் பொருட்கள் உடைந்துவிட்டாலோ, பழுதாகிவிட்டாலோ, உடனே அதற்கு மாற்றாக வேறு
பொருளை புதிதாக வாங்கும் பழக்கம்தான் தற்போது உள்ளது. இந்த நிலையில் பழுதுநீக்குவது எத்தனை அவசியம் தெரியுமா
இதன் மூலம் மின்சாதன பொருட்கள் கழிவாக மாறாமல் தவிர்க்கப்படும். வாடிக்கையாளர் நலன் தொடர்பாக மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்ற பணிகளை செய்து வருகிறது. எந்த வகையான பொருட்களை தயாரித்தாலும் அதற்கு உண்டான உதிரி பாகங்களை திறந்தசந்தையில் விற்க இந்த புதிய சட்டம் வகை செய்கிறது. இந்தியாவில் ரிப்பேர் செய்வதற்கான வசதிகள் குறைவாக உள்ளதாலேயே பெரும்பாலான டிஜிட்டல் மின்னணு பொருட்கள் குப்பைக்கு செல்கின்றன. சுற்றுச்சூழல் மாசடைவதை தவிர்க்கவும், பொதுமக்கள் தேவையில்லாமல் புதிய பொருட்களை வாங்குவதை தவிர்க்கவும் இந்த புதிய சட்டம் மூலம் தீர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.பொருட்களை தயாரிக்கும் நிறுவனம்,அது பழுது ஏற்பட்டால் எங்கு சரிசெய்து தரப்படும் உள்ளிட்ட தரவுகளை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும்.. அதன் மூலம் மக்கள் பயன்பெறுவார்கள்..பழுது நீக்குதல் தொடர்பான மொத்த விவரங்களையும் சேமிக்கும் மைய சேமிப்பு வசதியையும் இந்தியா தயாரித்து வருகிறது.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியனில் இது தொடர்பான சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன.