சொத்தை பிரித்துக் கொடுத்தவருக்கு உயர் பதவி!!!
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது,அதன்படி, கே.வி காமத் அந்த நிறுவனத்தின் சுதந்திரமான இயக்குநராக அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்படுவார் என்று அறிவிக்கdirubhaiப்பட்டள்ளது. திருபாய் அம்பானியின் சொத்தை முகேஷ் மற்றும் அனில் அம்பானிக்கு பிரித்து கொடுத்ததில் கே.வி.காமத் மிக முக்கியமானவராக பார்க்கப்பட்டவர் ஆவார். ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் மட்டுமின்றி, ரிலையன்ஸ் ஸ்ட்ராட்டெஜிக் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் சுதந்திரமான இயக்குநராகவும் நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸின் நிதிப்பிரிவு அண்மையில் ஜியோ பினான்சியல் சர்வீஸ் நிறுவனம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்து பிரித்து தனியாக ஒரு நிதிநிறுவனமாக ஜியோ பைனான்சியல் சர்வீஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. கே.வி.காமத் தற்போது நிதி உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான தேசிய வங்கித் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.