புதிய சிக்கலை சந்திக்கும் எலான் மஸ்க்…
டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினாலும் வாங்கினார் பரபரப்புக்கு கொஞ்சமும் குறைவே இல்லை
இந்த வரிசையில் தற்போது புதிய சிக்கல் அவருக்கு எழுந்துள்ளது. அதாவது டிவிட்டர் நிறுவனத்தை
வாங்கிய மஸ்க் கிட்டத்தட்ட 50 விழுக்காடு பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இது அமெரிக்காவின் கலிஃபோர்னியா சட்டத்துக்கு எதிரானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் திடீரென ஊழியரை பணிநீக்கம் செய்வதற்கு எதிராக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த ஊர் சட்டப்படி ஒருவரை பணியில் இருந்து நீக்க வேண்டுமானால் குறைந்தது 60 நாட்களுக்கு முன்பே சம்பந்தப்பட்டவர்களுக்கு அளித்திருக்க வேண்டும் என்கிறது விதி. ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்தில் பணியாளர்களை ஒரே நேரத்தில் பணியில் இருந்து தூக்கிவிட்டு பின்னர் நீதிமன்ற கண்டனத்துக்கு
ஆளான எலான் மஸ்க் தற்போது மீண்டும் அதே பாணியில் டிவிட்டர் பணியாளர்களை நீக்குவது கண்டனத்துக்கு
உரியது என வழக்கு பதிவு செய்துள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்