இனி விளம்பரம் கொடுப்பது வேஸ்ட்!!!!
டிவிட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கியது முதல் அவரை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் செய்திகளாக மாறிவிடுகின்றன. இந்த நிலையில் மஸ்க் வசம் டிவிட்டர் சென்றுவிட்டதால்,அதற்கு விருப்பம் இல்லாமல் பெரிய நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை டிவிட்டரில் இருந்து மெல்ல மெல்ல குறைத்து வருகின்றனர். ஆடி, ஜெனரல் மில்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் விளம்பரத்தை டிவிட்டரில் இருந்து கணிசமாக குறைத்துள்ளன. மஸ்க் தலைமையில் இயங்கும் டிவிட்டர் நிறுவனம் மீது விளம்பரதாரர்களுக்கு பெரிய அளவில் விருப்பம் இல்லை என்றே தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே போக்ஸ்வாகன்,லம்போர்கினி, பெண்ட்லி, போர்ஸே உள்ளிட்ட கார்கள் தங்கள் விளம்பரங்களை டிவிட்டரில் இருந்து விலக்கியுள்ளனர். கார் நிறுவனங்களுக்கு போட்டியாக டெஸ்லா கார் நிறுவனம் உள்ளதால் அந்த விளம்பரங்களை டிவிட்டரில் இருந்து வெளியேற்றி உள்ளதாக பெரிய நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. எனினும் தொடர்பே இல்லாத ஜெனரல் மில்ஸ் நிறுவனமும் தங்கள் நிறுவன உணவுப்பொருட்களின் விளம்பரத்தையும் நிறுத்தியுள்ளன. டிவிட்டர் நிறுவனத்தில் நடக்கும் அடுத்தடுத்த அதிர்ச்சிகரமான நிகழ்வுகளால் அச்சமடைந்துள்ள பெரிய நிறுவனங்கள் சற்று நிலைமையை கண்காணித்து செயல்பட முடிவெடுத்துள்ளன. உலகின் முன்னணி மருந்து நிறுவனங்களில் ஒன்றான ஃபைசர் நிறுவனமும் டிவிட்டர் நிறுவனத்தில் விளம்பரம் அளிக்க தயக்கம் காட்டியுள்ளது. பிராண்டுகளின் வளர்ச்சியில் டிவிட்டர் எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பது தெரியவில்லை என்றே பெரிய நிறுவனங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.