திடீர்னு வேலை இல்லைனு சொல்லிட்டா !!!! சமாளிக்க சில வழிகள்!!!
இந்தியாவில் சாதாரண மனிதனின் வருவாய், பொருளாதாரம் பெரிய பாதிப்பு இல்லை என்ற சூழல் இப்போது காணப்பட்டாலும், உலகளவில் நிலைமை சற்று மோசமாகவே உள்ளது என்பதை அறிந்து விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது. உலகளாவிய பொருளாதார மந்தநிலையால் நிச்சயம் இந்தியாவுக்கும் பாதிப்பு வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனவே எந்த சூழலிலும் வேலையிழக்கும் அபாயம் உள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த காரணத்தால் எமர்ஜென்சி ஃபண்ட் எனப்படும் அவசர தேவைக்கு சேமித்து வைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பணி இழப்பு அபாயம் உள்ள பகுதிகளில் பணியாற்றுவோர் இந்த நிதியை எவ்வளவு விரைவாக சேமிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக சேமிப்பது நல்லது. 4 முதல் 6 மாதங்களுக்கு தேவையான செலவுக்கான தொகையை சேமித்து வைப்பது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வழக்கமான சேமிப்பு கரையாமல் தடுக்கப்படும், முடிந்தவரை ஹெல்த் இன்சூரன்ஸ் எனப்படும் உடல்நல மருத்துவ காப்பீடு செய்வது மிகவும் சிறந்தது. வேலை எப்போது வேண்டுமானலும் பறிபோய்விடும் சூழலில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் ரெஸ்யூமை எந்த நேரத்திலும் தயாராக வைப்பது நல்லது. உங்கள் வாழ்க்கை முறையை முடிந்த வரை மாற்றிக் கொள்வது நல்லது.தேவையற்ற செலவுகளை குறைப்பது மிக மிக சிறந்த சேமிப்பாகும். முடிந்தவரை சிறு சிறு தொகையை சிப் எனப்படும் சிஸ்டமெட்டிக் இன்வெஸ்ட்மண்ட் பிளானில் முதலீடு செய்து வைத்தால் நிச்சயம் உங்களுக்கு கைகொடுக்கும். இந்தியாவில் 5-ல் ஒருவர் நிதி பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராக இல்லாமல் அவதிப்படுகின்றனர் என்கிறது புள்ளி விவரம். 51 விழுக்காடு மக்கள் தங்கள் நிறுவனத்தில் உள்ள காப்பீடு போதுமானதாக உள்ளதாக நினைக்கின்றனர் என்கிறது அந்த ஆய்வு. நிதி நெருக்கடி உங்களை எப்போது வேண்டுமானலும் தாக்கலாம்.. முடிந்தவரை விழிப்புடன் இருந்தால் பிழைத்துக்கொள்ளலாம்..சேமிப்பது நல்லது.