அமெரிக்காசவில் தும்மியதால், இந்தியாவில் சளி பிடித்தது…
அமெரிக்காவில் பணவீக்கம், விலைவாசி உயர்வு குறித்த புள்ளி விவரங்கள் அடுத்தடுத்து வெளிவந்த நிலையில், நேற்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி காணப்பட்டது. இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 550 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நடைபெற்றது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 1.21 விழுக்காடு குறைந்ததுடன்,வங்கிகள்,ஆட்டோமொபைல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. இதன் தாக்கம் தேசிய பங்குச்சந்தையிலும் பிரதிபலித்தது சென்செக்சில் மிக அதிகபட்சமாக ஆக்சிஸ் வங்கியின் மதிப்பு சுமார் 3.43 %சரிந்தது இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு இரண்டரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு நேரிட்டுள்ளது.
சந்தை மூலதன தொகை மொத்தமாக 281.55 லட்சம் கோடி ரூபாயாக சரிந்து உள்ளது. அமெரிக்காவில் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் சபைக்கான தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து இந்த சரிவு சந்தைகளில் பிரதிபலித்தது.
அமெரிக்க பங்குச்சந்தை மட்டுமில்லாமல், ஜப்பான்,சீனா, தென்கொரிய பங்குச்சந்தைகளும் இன்று சரிவை சந்தித்தன.
அமெரிக்காவில் சரிவு ஏற்பட்டதை அடுத்து இந்திய ரூபாயின் மதிப்பும் சற்று வலுவடைந்து, 81 ரூபாய் 59 காசுகளாக இருந்தது
கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் பெற்று வந்த அமெரிக்க டாலர் வீழ்ச்சி கண்டுள்ளது உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.