ஆமாங்க !!! உலக வரலாற்றில் முதன்முறையாக!!!
1 டிரில்லியன் இழப்பை சந்திக்கும் உலகின் முதல் பொதுப்பிரிவு நிறுவனம் என்ற மோசமான சாதனையை
அமேசான் நிறுவனம் செய்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் சீர்திருத்த நடவடிக்கைகள்,அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் மோசமான பொருளாதார மந்தநிலையில் இந்த பாதிப்பை அந்த நிறுவனம் சந்தித்துள்ளது. கடந்த புதன்கிழமை மட்டும் அந்த நிறுவனத்தின் பங்குகள் 4.3% சரிந்துள்ளது. கடந்தாண்டு ஜூலையில் அந்நிறுவன சந்தை மதிப்பு 1.88 டிரில்லியன் அமெரிக்கா டாலர்களாக இருந்த நிலையில் அண்மையில் அதன் மதிப்பு வெறும் 879 பில்லியனாக சரிந்துள்ளது. இந்த மோசமான சாதனையைப்போலவே மைக்ரோசாஃப்ட் நிறுவன பங்குகளின் மதிப்பும் கணிசமாக சரிந்தது. அமெரிக்காவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக மட்டும் அந்நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் 4 டிரில்லியன் டாலர் அளவுக்கு சந்தை மதிப்பை இழந்துள்ளன கொரோனா காலத்தில் கொடிகட்டி பறந்த வியாபாரம், தற்போது கொரோனா குறைந்துள்ளதால் பாதியாக சரிந்துள்ளது. உலகம் முழுவதும் நிலவும் பொருளாதார நிலையற்றதன்மை காரணமாக மக்களின் வாங்கும் திறன் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக வணிகம் சரிந்து, அமேசான் நிறுவன சந்தை மதிப்பு முதன்முறையாக 1 டிரில்லியனுக்கு கீழ் சென்றுள்ளது.