ஆ…தள்ளு தள்ளு தள்ளு..!!! என முயற்சி செய்யும் இந்தியா!!!
உலகின் பலநாடுகளும் அமெரிக்க டாலரிலேயே நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்தியா தற்போது ரஷ்யா, இலங்கை,மாலத்தீவு,ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில்
ரூபாயில் வர்த்தகத்தை மேற்கொள்ள முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. வோஸ்ட்ரோ கணக்குகள் என்பது
ஒரு வங்கியின் வாடிக்கையாளர் வேறு ஒரு வங்கிக்கு செல்லாமலேயே பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதியாகும்.
நாடுகளுக்கு இடையே நடக்கும் வர்த்தகம் வோஸ்ட்ரோ கணக்கு மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டு வர்த்தகத்தை இந்திய ரூபாயில் மேற்கொள்வது தொடர்பாக கடந்த ஜூலை மாதத்திலேயே ரிசர்வ்
வங்கி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஜூலை மாதம் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டாளும், வோஸ்ட்ரோ கணக்கின் மூலம் இந்தியாவும் ரஷ்யாவும் தான் முதல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உள்ளனர் கடந்த சில மாதங்களாக ரஷ்யாவில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கி வரும் இந்தியா, இன்னும் அமெரிக்க டாலர்களில்தான் பணத்தை ரஷ்யாவுக்கு அளித்து வருகிறது. இந்த சூழலில் தற்போது வோஸ்ட்ரோ கணக்கு மூலம் எண்ணெய்க்கான பணத்தை ரூபாயில் அளிப்பது தொடர்பாக UCo வங்கியும், ரஷ்யாவின் காஸ்பிராம்பேங்க் நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளன. உக்ரைன் மீது போர் தொடுத்ததால் மேற்கத்திய நாடுகளின் கோபத்துக்கு ஆளான ரஷ்யாவால் ஸ்விஃப்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய பொருளாதார இழப்பை ரஷ்யா சந்தித்து வரும் இந்த சூழலில் வோஸ்ட்ரோ கணக்குகள் ரஷ்யாவுக்கு பேருதவியாக மாற இருக்கிறது. இந்தியாவின் வர்த்தக கணக்கு குறைபாடு பலநாடுகளிலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக சீனா ஸ்விட்சர்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளுடனான வர்த்தக குறைபாடு உயர்ந்து வரும் சூழலில்,அரபு அமீரகம், ஹாங்காங்,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிடம் வர்த்தகம் மிதமிஞ்சியுள்ளது.