ஐபோனை அப்டேட் பண்ண போறீங்களா?? கவனம் தேவை !!!
இந்தியாவில் 5வது தலைமுறை அலைக்கற்றை ஏலம் அண்மையில் முடிந்தது. இதில் பெரும்பாலான பகுதியை ரிலையன்ஸ் ஜியோவும் அதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனமும் ஏலத்தில் எடுத்துள்ளன இந்த இரு நிறுவனங்களும் ஏற்கனவே பல பெரிய நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளன. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது 5ஜி வசதி உடைய ஐபோன்களில் புதிய மென்பொருளை வெளியிடாமல் இருந்து வந்தது. இத்தனை பெரிய தொகை கொடுத்து ஐபோன்கள் வாங்கியும் 5ஜி வசதி கிடைக்கவில்லையே என பலரும் புலம்பி வந்தனர். இந்த சூழலில் 5ஜி வசதியுள்ள ஐபோன்களின் புதிய பீட்டா அப்டேட்டை ஐபோன் வெளியிட்டுள்ளது. புதிய அப்டேட்டை பரிசோதித்து எவ்வளவு வேகம் இணையம் செயல்படுகிறது என்பதை தங்களுக்கு கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய அப்டேட்டை பரிசோதிக்கும் முன்னர் வாடிக்கையாளர்கள் தங்கள் டேட்டாக்களை பேக்அப் எடுத்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஐபோன் 12,13,14 உள்ளிட்ட செல்போன்களில் பீட்டா வசதியுள்ள செல்போன்களுக்கு முதல் கட்டமாக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. 5ஜி வசதி ஜியோவில் குறிப்பிட்ட இடங்களிலும், ஏர்டெல்லில் சென்னை,மும்பை,
புதுடில்லி,பெங்களூரு, ஐதராபாத்,நாக்பூர் வாரணாசியிலும் 5ஜி வசதி தற்போது உள்ளது.