போலிகளைக் கண்டு ஏமாறாதீர் – எச்சரிக்கும் நிறுவனங்கள்!!!
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது அக்சென்சர் நிறுவனம். இதன் இந்திய பிரிவு அலுவலகத்தில் அண்மையில் ஒரு புகார் எழுந்தது. அதாவது ஏற்கனவே பல நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு தற்போது அக்சென்சரில் சேர இருப்பதாக சிலர் போலியான ஆவணங்கள், போலியான பணி சான்றுகள் அளித்தது தெரிய வந்தது.
இது பற்றி விசாரணை நடத்திய அக்சென்சர், போலியாக ஆவணங்களை அளித்து அக்சென்சரில் பணியில் சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக சிலர் பணம் பறித்து வருவதாக நிர்வாகத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது, அதில், தங்கள் நிறுவனத்தில் பணி வாங்கித்தர எந்த முகவர்களையும் நிறுவனம் நியமிக்கவில்லை என்றும் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் யாரேனும் பணம் கேட்டால் அளிக்க வேண்டாம் என்றும் அந்த நிறுவனம் விளக்கியுள்ளது. அந்நிறுவனத்தின் மொத்த வருவாயில் பாதிக்கும் அதிகமாக இந்தியாவுக்கு வெளியில் இருந்து தான் கிடைக்கிறது. உலகமே பொருளாதார மந்தநிலையில் உள்ளபோதிலும் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் வளர்ச்சி கண்டு வருகின்றன. இருப்பினும் சில நாடுகளில் தகவல் தொழில்நுட்பத்தினருக்கு திட்டங்கள் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. இந்த சூழலில் மோசடியாக பணியில் சேர்ந்தவர்களை அக்சென்சர் நீக்கியது பரபரப்பாக பேசிப்படுகிறது.