இதிலிருந்து என்ன தெரியுது???
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சியான இ-ரூபாயின் சேவை அளிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி சில வங்கிகளில் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய முயற்சிக்கு பல வங்கிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. எனினும் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி,ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி மற்றும் எச்டிஎப்சி வங்கி ஆகியவற்றை ரிசர்வ் வங்கி தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வங்கிகள் பணத்தை பரிமாற்றுவதற்கு இசைவான மென்பொருள் உள்ளதா அல்லது தனி நெட்வொர்க் தேவைப்படுமா என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை. இந்த 5 வங்கிகளுக்கு இடையேயான டிஜிட்டல் பணம் கையாளப்படும் போது அவர்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் உள்ளனவா என்று தேசிய பேமண்ட் கார்பரேஷன் மற்றும் ரிசர்வ் வங்கி உதவி செய்யும் டிஜிட்டல் பணத்துக்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்ட நிலையில், அது முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் போது, பேமண்ட் செய்யும் வசதியில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அறிமுகமாகும் ரீட்டெயில் பிரிவு மட்டுமே முதலில் தொடங்கப்படும் என்றும் ஒட்டுமொத்தமான இரண்டாவது பிரிவு வர சற்று தாமதம் ஆகிறது. தற்போது நடைமுறையில் உள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் டிஜிட்டல் ரூபாயை சேர்ப்பதா இல்லை தனியாக புதிய நுட்பங்கள் தேவையா என அரசு தரப்பில் விவாதம் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் வெற்றிகரமாகும் பட்சத்தில் உலகிலேயே முதல் நாடாக இந்தியாவின் டிஜிட்டல் ரூபாய் திட்டம் இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எவ்வளவோ பொதுத்துறை வங்கிகள் இருந்தும் இந்த பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கியை தவிர எந்த ஒரு பொதுத்துறை வங்கிக்கும் இடம் அளிக்கப்படவில்லை. தனியார் வங்கிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதை பார்க்க முடிவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.