இருக்கும் ஊழியர்களை கசக்கி புழிந்து உருவாகிறது டிவிட்டர் 2.0
டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், வித்தியாசமான வேலை வாங்கும் திறமை கொண்டவர் எத்தனை பணியாளர்கள் வேலையை விட்டு போனாலும் பரவாயில்லை.. இருக்கும் திறமையான பணியாளர்களை அதிக நேரம் வேலைவாங்கி, அவர்களிடம் இருந்து தரமான பொருளை விற்பனைக்கு வைப்பதில் கெட்டிக்காரர் மஸ்க்.. டிவிட்டர் கைமாறியபிறகு அதனை மறுஉருவாக்கம் செய்யும் முயற்சியில் மஸ்க் ஈடுபட்டுள்ளார் வழக்கமான 8 மணி நேர பணியைத் தாண்டி, பல மணி நேரம் அலுவலகமே கதி என்று கிடக்கும் பணி கலாச்சாரத்தை அவர் உருவாக்க முயற்சித்து வருகிறார்.
10 ஆண்டுகள்,12 ஆண்டுகள் டிவிட்டரில் குடும்பம் போல பழகிவிட்டு,திடீரென பணியில் இருந்து போகச் சொன்னதும்
பல பணியாளர்கள் உணர்ச்சி வசப்படுவதை காண முடிந்தது. டிவிட்டரில் அறிமுகமாக உள்ள புதிய வசதிகளைத்தான் உருவாக்க முடியுமே தவிற பழைய ஆவணங்கள், பழைய லைப்ரரியை நிர்வகிக்கும் குழு இல்லாமல் டிவிட்டரை இயக்குவது கடினம் என்றும் பலர் கருதுகின்றனர். இந்த டிஜிட்டல் ஆவணக்குழுவும் தற்போது பணியில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல் கசிந்துள்ளது டிவிட்டரில் மிகச்சிறப்பாக பணியாற்றியவர்கள் தனது குழுவில் உள்ளதால் தாம் கவலைப்படப் போவதில்லை என்றும் டிவிட்டரில் எலான் மஸ்க் ஆணவத்துடன் பதிவிட்டு வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அதிக நேர பணி, வரம்பற்ற வேலை ஆகிய காரணத்தால் டிவிட்டர் ஊழியர்கள் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர் சில பழைய ஊழியர்கள் மனதை கல்லாக்கிக்கொண்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறி வரும் போக்கும் அதிகரித்துள்ளது.