நிலுவையில் உள்ள செட்டில்மெண்ட் குறித்து அப்டேட்….
பங்குச்சந்தை சார்ந்த அனைத்து தரவுகளும் செண்ட்ரல் டெபாசிட்டரி சர்வீஸ் என்ற பெயரை கொண்ட அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த நிலையில் குறிப்பிட்ட இந்த அமைப்பின் மீது அண்மையில் இணைய தாக்குதல் நடத்தப்பட்டது
இதனால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டதுடன் பேக் எண்ட் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது. தாக்குதலுக்கு ஆளான சர்வர்கள் குறித்து அப்டேட்டை அந்த அமைப்பு வெளியிட்டது. அதில் செட்டில்மண்ட் சார்ந்த பணிகள் தொடர்பாக மீட்பு நடவடிக்கை நடந்து முடிந்திருப்பதாகவும், வெள்ளிக்கிழமை நிலையைப் மீட்டெடுக்கும் பணிகளில் தொழில்நுட்ப பணியாளர்கள் ஈடுபட்டதாகவும் சிடிஎஸ்எல் தெரிவித்துள்ளது. பணத்தை வழங்குவதிலும் புதிதாக பெறுவதிலும் சிக்கல் இருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கமான வகையில் வர்த்தகம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அந்த அமைப்பின் சர்வர்கள் சிலவற்றில் மால்வேர் வகை வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தாக்குதலுக்கு ஆளான உடனேயே பாதிக்கப்பட்ட சர்வர் தனியாக பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவித அதிமுக்கிய தகவல்களும் வெளியே பகிரப்படவில்லை என்றும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது விரைவில் மால்வேர் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முழு விவரங்கள் வெளியாக உள்ளன.செட்டில்மண்ட் வகை பேமண்ட் விரைவில் சீரடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.