பாலின் விலையை மேலும் உயர்கிறதா????
குஜராத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூட்டுறவு பால் நிறுவனம் அமுல். இந்த நிறுவனம் குஜராத் மட்டுமின்றி
டெல்லி,மேற்குவங்கம் மற்றும் மும்பையில் தனது பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பால் நாள் ஒன்றுக்கு 150 லட்சம் லிட்டர் விற்கப்படுகிறது. இதில் டெல்லியில் மட்டுமே 40 லட்சம் லிட்டர் பால் விற்கப்படுகிறது. அண்மையில் மதர் டைரி நிறுவனம் தனது பால் பொருட்களின் விலையை உயர்த்தியது. full cream பாலின் விலை லிட்டருக்கு ஒரு ரூபாயும்,டோக்கன் மில்க் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டது. இந்த சூழலில் அமுல் நிறுவனத்தின் பொருட்கள் விலை உயர்த்தப்படுமா என்று அந்த நிறுவனத்தின் தலைவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள சோதி, இப்போது எந்தவித திட்டமும் இல்லை என்றும்,உற்பத்தி செலவு பெரிய அளவில் உயராதபோது
ஏன் பால் விலையை ஏற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் மாதத்தில் குஜராத் மாநிலத்தில் தேர்தல் வர உள்ள சூழலில், பால்விலையை உயர்த்தினால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மற்றொரு தரப்பினர் சாடுகின்றனர். குஜராத் கூட்டுறவு பால் சங்கம் இந்தாண்டில் மட்டும் 3 முறை பால்விலை ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல் மதர் டெய்ரி நிறுவனத்தின் பால் விலை 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் அமுல் மற்றும் மதர் டெய்ரியின் பால் பொருட்கள் மட்டும் 80 % பங்களிப்பை செய்துள்ளன.
பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக காசு தரவேண்டும் என்பதற்காக மதர் டெய்ரி நிறுவனம் அண்மையில் பால் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் டெல்லி மற்றும் சுற்று வட்டாரங்களில் வசிக்கும் மக்கள் கடும் அவஸ்தை அடைந்து வருகின்றனர்