மக்களின் சேமிப்பு தான் எங்க பிரச்சனையே!!!!
மியூச்சுவல் ஃபன்ட்ஸ் எனும் பரஸ்பர நிதி என்பது மக்களின் நிதி தேவைக்கு சிறந்த முதலீட்டு முறை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது அதிலும் சிப் எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வஸ்ட்மெண்ட் பிளான், திட்டம் அண்மை காலத்தில் மக்கள் மத்தியில் மிகுந்து வரவேற்பை பெற்றுள்ளது இன்னும் கூட அதிக நபர்கள் சேமிப்பை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் செபி அறிவுறுத்துகிறது இந்தியாவில் மட்டும் 5 கோடியே 93 லட்சம் பேர் சிப் கணக்குகள் வைத்திருக்கின்றனர். வருங்காலத்தில் தேவை ஏற்படும்பட்சத்தில் அதனை சமாளிக்க இந்த வகை சிப் கணக்குகள் உதவுகின்றன. இந்த நிலையில் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தை படுத்தல் பிரிவு தலைவர் நாளிதழ் ஒன்றுக்கு சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி அளித்துள்ளார். அதில் கொரோனாவுக்கு முன்பு வரை சொகுசுகார்கள் அதிகம் விற்றதாகவும், கொரோனாவுக்கு பிறகு மக்கள் சிப் வகையில் பரஸ்பர நிதியில் அதிகம் சேமிக்கத் தொடங்கிவிட்டதாகவும் , இது தங்கள் விற்பனைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1 கோடி சிப் கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன இது பற்றி பேசியுள்ள சந்தோஷ் ஐயர்,சொகுசு கார் விற்பனை சரிந்துள்ளதாகவும், வாங்க நிறைய பணம் வைத்திருப்பவர்கள் கூட, பென்ஸ் கார் விலை எப்போது சரியும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பலருக்கும் சொகுசு கார் வாங்க ஆசை இருந்தாலும், விசாரிப்பதோடு நின்றுவிடுவதாகவும், தற்போது சிப் பக்கம் மக்களின் கவனம் சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கருத்து சந்தையில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.