பென்ஸ் கார் வாங்க மாதம் இவ்வளவு ரூபாய் சேர்த்து வைங்க!!!!
கார்களில் மிக சொகுசு ரகத்தைச் சேர்ந்ததாக கருதப்படுவது மெர்சிடீஸ் வகை கார்கள். இந்த கார்களை வாங்க மாதம் 50 ஆயிரம் ரூபாய் சேர்த்தால் வாங்க முடியுமா என்று கேள்வி எழுந்தது. இது பற்றி அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி சந்தோஷ் அய்யர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் இன்றைய விலையில் சி-கிளாஸ் வகை சொகுசு கார் விலை 64 லட்சம் ரூபாயாக இருக்கிறது. இந்த காரை வாங்க ஒருவர் மாதம் 50ஆயிரம் ரூபாய் சிப் வகையில் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு செய்தால் 7 ஆண்டுகளில் 65 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆனாலும்
7 ஆண்டுகளுக்கு இதே 64 லட்சம் ரூபாய்க்கு இந்த கார் இருக்காது என்பதே உண்மையாக உள்ளது. எனவே சிப் வகையில் முதலீடு செய்ய விரும்பும் நபர் மாதம் 50 ஆயிரத்துக்கு பதில் 70 ஆயிரம் சேமிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அத்தனை பெரிதாக பணம் சேமித்து வைத்தாலும் கூட, வாங்கிய அடுத்த நொடியே அந்த காரின் விலை டெப்ரிசியேஷன் எனப்படும் பாதிவிலைக்கு மாறிவிடும் எனவே படிப்பு தேவை, வீடு கட்ட வேண்டும்,திருமண செலவுகள் இவைதான் இலக்காக இருக்கவேண்டும் என்று கூறும் பொருளாதார நிபுணர்கள் ஆடம்பரத்துக்கு சேமிக்காமல்,அத்தியாவசித்துக்கு சேமிக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.