இந்திய சந்தைகளில் முன்னேற்றம்…
ஜனவரி 10 ஆம் தேதி இந்திய சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 271 புள்ளிகள் உயர்ந்து 71 ஆயிரத்து 657 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73 புள்ளிகள் உயர்ந்து 21,618 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. கடைசி நேரத்தில் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதால் சந்தைகளில் பெரிய முன்னேற்றம் காணப்பட்டது. Cipla, Reliance Industries, Adani Enterprises, HCL Technologies, Adani Ports உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. இதேபோல் ONGC, Divis Labs, BPCL, NTPC, Power Grid CorporatioN உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. சுகாதாரத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, உலோகம் உள்ளிட்டத்துறை பங்குகள் 0.4விழுக்காடு உயர்ந்தன. எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் 0.5விழுக்காடு சரிவை கண்டன. AIA Engineering, Antony Waste, AstraZeneca Pharma, Bharat Wire Ropes, Cochin Shipyard, Entertainment Network India, GlaxoSmithKline Pharmaceuticals, Hitachi Energy, Infibeam Avenue, NCC, Network 18, Olectra Greentech, TV18 Broadcast, Visaka Industries,Yes Bankஉள்ளிட்ட 400க்கும் அதிகமான நிறுவனங்கள் தங்கள் 52 வார உச்ச விலையை எட்டின. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி 46560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 5820 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 77 ரூபாய் 50 காசுகளாக இருக்கிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 77 ஆயிரத்து 500 ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்க.