வோடஃபோன் ஐடியா முன்னேறுமா?
கடுமையான நிதி சிக்கலில் சிக்கித்தவித்து வரும் வோடஃபோன் ஐடியா நிறுவனம், அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிதி கழகத்தில் இருந்து நிதி பெற தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொலை தொடர்புத்துறை இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 4 மாதங்களுக்கு முன்பே நிதி பெறுவது குறித்து உத்தரவாதத்தை வோடஃபோன் ஐடியா நிறுவனம் அளித்திருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வோடஃபோன் ஐடியா நிறுவனத்தில் தற்போது அதிகபட்ச பங்குகளை மத்திய அரசாங்கம்தான் வைத்திருக்கிறது. அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய தொகையை வரும் 26ஆம் நிதியாண்டிற்குள் அந்நிறுவனம் செலுத்த கெடு உள்ளது.
வளர்ச்சி நிதி கழகத்திடம் இன்னும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், உரிய நேரத்தில் அது பற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என்று வோடஃபோன் ஐடியா நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. அரசாங்கத்துக்கு லைசன்ஸ் தொகையாகவும், அலைக்கற்றை பயன்பாட்டுத் தொகையாக வோடஃபோன் ஐடியா நிறுவனம் 700 கோடி ரூபாயும், அதற்கு உண்டான வட்டியும் அரசுக்கு தரவேண்டியுள்ளது. டிசம்பர் வரையிலான காலாண்டில் மட்டும் 900 கோடி ரூபாயை வோடஃபோன் நிறுவனம் அரசுக்க தரவேண்டியுள்ளது. 2025 முதல் 2031 ஆம் ஆண்டுவரை மட்டும் 1லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடனை வோடஃபோன் நிறுவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் வோடஃபோன் நிறுவனம் 5ஜி சேவையை வழங்குவது தொடர்பாக இண்டஸ் டவர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. கடந்தாண்டு செப்டம்பர் வரை மட்டுமே வோடஃபோன் ஐடியா நிறுவனம் 7,174 கோடி ரூபாய் அளவுக்கு கடன் அளிக்கப்படவேண்டியுள்ளது.
அமெரிக்க டவர் நிறுவனம், நோக்கியா, எரிக்சன் என பல நிறுவனங்களுக்கு வோடஃபோன் நிறுவனம் கடன்பட்டுள்ளது