நூற்றுக்கணக்கானோரை வேலையை விட்டு தூக்கும் விப்ரோ..
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக கருதப்படும் விப்ரோ நிறுவனம் தனது நடுத்தர நிலை பணியாளர்களில் நூற்றுக்கணக்கானோரை பணியில் இருந்து நீக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் குறைவான மார்ஜின் கொண்ட நிறுவனங்களில் விப்ரோவும் ஒன்று. இந்நிறுவனம் கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 16 விழுக்காடு மார்ஜினை கொண்டுள்ளது. டாடா கன்சல்டன்சி நிறுவனம், இன்போசிஸ், எச்சிஎல் நிறுவனத்தின் மார்ஜின் 25,20.5 மற்றும் 19.8 விழுக்காடு மார்ஜினை முறையே கொண்டுள்ளன.
ஒரு மாதத்துக்கு முன்பே நடுத்தர பணியாளர்களுக்கு கடிதம் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.காப்கோ என்ற நிறுவனத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு 1.45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் விப்ரோ வாங்கியது. கொரோனாவுக்கு பிறகு கன்சல்டிங் வணிகம் குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கையை விப்ரோ நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நிலை 3-ல் உள்ள பணியாளர்களின் பணிகளை தற்போது நிலை 2-ல் உள்ள பணியாளர்களுக்கு கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. நிலை 1 -ல் உள்ள பணிகள் ஆட்டோமேஷன் எனப்படும் தானியங்கி மயமாக்கப்பட்டுள்ளது.
விப்ரோவில் நடுத்தர பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டாலும், இப்போதும் தலைமை பன்பு கொண்ட ஊழியர்களும், திறமையான பணியாளர்கள் இருப்பதாக எவரஸ்ட் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பெண்டார் சாமுவேல் தெரிவித்துள்ளார்