பேடிஎம்முக்கு கட்டுப்பாடு ஏன்?
பே டி எம் நிறுவனத்தின் பேமன்ட்ஸ் வங்கி பிரிவு புதிதாக டெபாசிட்கள் வாங்க ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு பிறகு இந்த பேமண்ட்ஸ் வங்கி பிரிவு இயங்கக் கூடாது. இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்ததால் தகவல்கிடைத்தது. அதாவது கடந்த மார்ச் 2022ஆம் ஆண்டே புதிதாக பேடி எம் பேமண்ட்ஸ் வங்கியில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி ஆணையிட்டது. ரிசர்வ் வங்கியின் விதியை பின்பற்றவில்லை என்று வெளியில் இருந்து ஒரு ஆடிட் அப்போதே செய்யப்பட்டது. இதனை அடுத்தே ரிசர்வ் வங்கி 2022-ல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை பேடிஎம் தொடர்ந்து மீறி வந்ததால் ரிசர்வ் வங்கியின் வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949 ஆம் ஆண்டு 35 ஏ பிரிவின் கீழ் இந்த நடவடிக்கையை பேடிஎம் மீது ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து,ரிசர்வ் வங்கி காட்டும் வழிமுறைகளை பின்பற்றத் தயாராக இருப்பதாக பேடிஎம் நிறுவனம் தனது விளக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் பேடிஎம் நிறுவனத்துக்கு 500 கோடி ரூபாய் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என்று மதிப்பிடப்படுகிறது. நடவடிக்கைக்கு ஆளான பிறகும் கூட லாபகரமாக மாற்ற அனைத்து செயல்களையும் செய்ய முன்வர உள்ளதாக பேடிஎம் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.